Chapter 14 : Kural: 140 Possessing Propriety
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
மு.வ உரை :
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் பல நு}ல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
கலைஞர் உரை :
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நு}ல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
சாலமன் பாப்பையா உரை :
முந்திய அறநு}ல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நு}ல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
English Translation:
Ulakaththotu Otta Ozhukal Palakatrum
Kallaar Arivilaa Thaar
Explanation:
Those who know not how to act agreeably to the world though they have learnt many things are still ignorant.
Those who don’t learn to abide by the decorous norms of the society,
even if well-read, are unwise.