Friday, December 2, 2016

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 234


Division I : Aram (Righteousness)

Chapter 23 : புகழ் - FAME

Kural : 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

மு.வ உரை :

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால்  வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

கலைஞர் உரை :

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

சாலமன் பாப்பையா உரை :

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

English Translation:

Kural: 234

Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku

Explanation:

If one has acquired extensive fame within the limits of this earth  the world of the Gods will no longer praise those sages who have attained that world

The world of devas, will cease to praise pure scholars, if one,
through his deeds across this world, earns everlasting fame.

DT: 03 Dec 2016

No comments:

Post a Comment