Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 224 இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு. மு.வ உரை : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது. கலைஞர் உரை : ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். சாலமன் பாப்பையா உரை : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. English Translation: Innaadhu Irakkap Patudhal Irandhavar Inmukang Kaanum Alavu Explanation: To see men begging from us in disagreeable until we see their pleasant countenance To be asked to give is bitter too, until seeing the smiling face of the recipient. DT : 23 Nov 2016