*Division I : Aram (Righteousness)*
*Chapter 22: Awareness of, and alignment, to the ways of the world*
*Kural : 219*
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
*மு.வ உரை :*
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல் செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
*கலைஞர் உரை :*
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.
*சாலமன் பாப்பையா உரை :*
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
*English Translation:*
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera
Seyyaadhu Amaikalaa Vaaru
*Explanation:*
The poverty of a benevolent man is nothing but his inability to exercise the same
A benevolent person turns poor when he laments his inability
to do the good deeds he is used to doing.
*DT: 18 Nov 2016*
No comments:
Post a Comment