Division I : Aram (Righteousness)
Chapter 23 : புகழ் - FAME
Kural : 231
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
மு.வ உரை :
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும் அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
கலைஞர் உரை :
கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை :
ஏழைகளுக்குக் கொடுப்பது@ அதனால் புகழ் பெருக வாழ்வது@ இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
English Translation:
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku
Explanation:
Give to the poor and live with praise There is no greater profit to man than that
Give, and live with fame; there is
no other gain for lives.
DT: 30 Nov 2016
No comments:
Post a Comment