Division I : Aram (Righteousness)
Chapter 23 : Charity
Kural : 225
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
மு.வ உரை :
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும் அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
கலைஞர் உரை :
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை :
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
English Translation:
Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin
Explanation:
The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)
The strength of the strongest is to endure hunger;
it trails the ability to eradicate that hunger.
DT: 24 Nov 2016
No comments:
Post a Comment